கஜா வன்செயல்: வாகனங்கள் எரிப்பு; அமைச்சர் ஓட்டம்; 100 பேர் மீது வழக்கு

கஜா வன்செயல்: வாகனங்கள் எரிப்பு; அமைச்சர் ஓட்டம்; 100 பேர் மீது வழக்கு

2 mins read
fe7306fa-b2e2-42bb-96e8-a6eb012ef1a3
-

கஜா புயல் காரணமாக தங்களுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகளைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேதத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங் கலம், வடகாடு, கொத்தமங்கலம் கிராமங் களைச் சேர்ந்த மக்கள் அரசாங்க வாக னங்களைத் தீவைத்து கொளுத்திவிட் டார்கள். இந்த நிலையில் வேதாரண்யம் தவிர வேறு எந்தப் பகுதியிலும் கஜா புயல் பாதிப்பு அவ்வளவாக இல்லை என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரி வித்ததை அடுத்து வேதாரண்யம் அருகே கன்னித்தோப்பு என்ற ஊரில் அவருடைய வாகனத்தைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கிவிட்டார்கள்.

சுவர் ஏறி குதித்து அமைச்சர் தப்பிவிட் டார். போலிஸ் லேசான தடியடி நடத்தியது. வன்செயல்கள் மூண்டுள்ள இடங்களில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொத்தங்குடி கிராமத்தில் இன்னமும் பதற்றம் நிலவுவதாக நேற்று தெரிவிக்கப் பட்டது. திருவரங்குளத்தை அடுத்த வம்பன் நாலுரோட்டிலும் போலிஸ் தடியடி நடத்தியது. அந்தக் கிராமங்களில் புயல் சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரி வித்துவிட்டதாக ஊடகத்தில் செய்தி வெளியானதை அடுத்து மக்கள் கடும் கோபமடைந்து வன்செயலில் இறங்கினர்.

அதோடு மட்டுமின்றி, நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் அவர்கள் குறைகூறினர். தங்கள் பகுதி களில் புயல் சேதத்தை மதிப்பிட வந்த பல அதிகாரிகளையும் இரவு நேரத்தில் அவர் கள் பிடித்துவைத்துக்கொண்டார்கள். ஆறு அரசாங்க வாகனங்களைத் தீ வைத்து கொளுத்திவிட்டார்கள். இதனை அடுத்து போலிஸ் அந்தப் பகுதிகளுக்கு விரைந்தது. வன்செயல்களில் ஈடுபட்ட தாக் கூறி போலிஸ் கிராம மக்கள் 100 பேரைக் கைது செய்தது என்றும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனிடையே, அதிக போலிசாரின் உதவியுடன் ஆலங்குடி, கொத்தமங்கலம் போன்ற பகுதிகளில் விழுந்துகிடக்கும் ஏராளமான மரங்களை வெட்டி அகற்றும் பணி முழுமூச்சாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு அதிகமாக உள்ளது. வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் தங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வில்லை என்றும் சேதத்தை அதிகாரிகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவும் கூறி கிராம மக்கள் அரசாங்க வாகனங்களை எரித்துவிட்டார்கள். படம்: தமிழக ஊடகம்