மருத்துவச் சான்றிதழ்: ஆயுதப் படைகள் திருத்தம் செய்யலாம்

மருத்துவச் சான்றிதழ்: ஆயுதப் படைகள் திருத்தம் செய்யலாம்

1 mins read

தனியார் மருத்துவர்கள் தரும் மருத்துவச் சான்றிதழ்களை சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் மருத்துவ அதிகாரிகள் உடனடியாக நிராகரிப்பதில்லை என்று நேற்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளு மன்றத்தில் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் மருத்துவர்கள் தரும் மருத்துவச் சான்றிதழ்களில், முகாமின் மருத்துவ அதிகாரி களால் நிராகரிக்கப்பட்டவை எத்தனை என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஃபை சால் இப்ராஹிம் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் இங் எழுத்துவழி பதிலளித்தார்.

தனியார் மருத்துவர்கள் தரும் மருத்துவச் சான்றிதழ்களை நிராகரிக்காவிட்டாலும் முகாமின் மருத்துவ அதிகாரிகள் தாங்களே மருத்துவ மதிப்பீடு செய்து மருத்துவச் சான்றிதழில் திருத்தம் செய்யுமாறு முன்மொழியலாம். மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட விடுப்புக் காலத் தில் மாற்றம் செய்வது, குறிப்பிட்ட சில நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற வற்றில் இத்திருத்தங்கள் அமைய லாம். மருத்துவ அதிகாரி இது போன்ற திருத்தங்களைச் செய்ய, சம்பந்தப்பட்ட தனியார் மருத்து வரிடம் கலந்து பேசலாம். அல்லது முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவ நிபுணரைச் சந்திக்கப் பரிந்துரைக்கலாம் என்றார் அமைச்சர் இங்.