எல்லா தொகுதிகளிலும் வெற்றி: காங்கிரஸ் நம்பிக்கை

எல்லா தொகுதிகளிலும் வெற்றி: காங்கிரஸ் நம்பிக்கை

1 mins read

சென்னை: மத்திய, மாநில அரசுகள் தமிழர்களை வஞ்சிப் பதாக வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர் சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கஜா புயலானது தமிழகத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டார். அதிமுக அரசையும், மத்தியில் உள்ள பாஜக அரசையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள தாகக் குறிப்பிட்ட அவர், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக- காங்கி ரஸ் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மதச்சார்பற்ற சக்திகள் இணைவதன் மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார் திருநாவுக்கரசர். இதையடுத்துப் பேசிய விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாஜகவை வீழ்த் தும் சக்தி காங்கிரசிடம் உள்ளது என்றார். "ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்த போதும் இவ்வாறு கூறி னேன். அவர் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும். மீண்டும் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது," என்றார் திருமாவளவன்.