கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி திடீர் அனுமதி மறுப்பு

கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி திடீர் அனுமதி மறுப்பு

1 mins read

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலையை வைக்க அளிக்கப்பட்ட அனுமதியை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் முகப்புப் பகுதியில் கருணாநிதியின் சிலையை வைக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம் சில நிபந்தனைகளுடன் சிலை வைக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில் சிலை வைக்க, மாநில உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை உரிய ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக சிலை வைக்க அனுமதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநகராட்சியின் இணையதளத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.