உருவாகிறது புதுப் புயல்: அச்சத்தில் மூழ்கியுள்ள மக்கள்

உருவாகிறது புதுப் புயல்: அச்சத்தில் மூழ்கியுள்ள மக்கள்

2 mins read

கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள் ளது. இப்புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றொரு புய லாக உருவெடுக்குமா என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யவில்லை என்ற போதிலும் கரையைக் கடக்கும்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு, வடமேற்காக நகர்ந்துகொண்டிருக்கும் இத் தாழ்வு மண்டலப் பகுதி இன்று கடலூரை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. "காற்றழுத்தத் தாழ்வு மண்ட லம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.

ஒருவேளை இது வலுவிழந்த புயலாகக் கூட மாறக்கூடும். "தன்னுடன் மேகக் கூட்டங் களையும் இழுத்துச் செல்வதால், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண் டலம் காரணமாக வடதமிழகத்தில் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யும்" என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடதமிழகத்துக்கு 'ரெட் அலர்ட்' எனப்படும் அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்படலாம் என்கிறார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான். இன்று முதல், எதிர்வரும் 23ஆம் தேதிவரை வடதமிழகத் தில் பலத்த மழை பெய்யும் என் றும் குறிப்பாக சென்னை மாந கரைப் பொறுத்தவரை இந்த மழைப்பொழிவு மிக முக்கியமானது என்றும் வானிலை ஆய்வு நிபுணர் கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நாகப்பட்டினம் முதல் புதுவை வரையிலான பகுதிகளில் அடுத்த இரு தினங் களுக்கு 30 செமீ வரை மழை பெய்யும் என்றும், இச்சமயம் 70 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெளியே அதிகம் செல்லாமல் இரு தினங்க ளுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது என கடலூர் ஆட்சியர் ககன் தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.