நெல்லை: இந்தியாவில் பெரும்பாலும் ஒரு சாதியைச் சேர்ந் தோர் அதே சாதியைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தை மீறு வோர் அவரது குடும்பத்தைச் சேர்ந்தோராலேயே கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம், அம்பாசத்திரம் அருகே வேறுசாதிப் பெண்ணைக் காதலித்த இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலியும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி சங்கர், 33. தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கச்சென்ற இவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. பெண்ணின் வீட்டார் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிப்பதுபோல தெரிவித்து இசக்கி சங்கரை ஆணவக் கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

