சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க விஞ்ஞானி யோசனை

சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க விஞ்ஞானி யோசனை

1 mins read
3bad4a6f-f481-480d-9632-e56afb2a3f8a
-

திருவையாறு: கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங் களை மீண்டும் புத்துயிரூட்டி உயிர்ப்பிக்கமுடியும் என்று தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் கூறியுள்ளார். தஞ்சைமாவட்டம் பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேது பாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு, நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த தென்னையும் தென்னந் தோப்பு களும் கண்கொள்ளாக் காட்சி யாக வரவேற்பு அளிக்கும். இப்பகுதி மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வந்த லட்சக்கணக்கான தென்னை மரங்களும் வேரோடு நிலத்தில் சாய்ந்து கிடக்கின்றன. வாழையடி வாழையாக தங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வந்த தென்னம்பிள் ளைகளைப் பறிகொடுத்த தென்னை விவசாயிகள் கண் ணீரும் கம்பலையுமாக உள்ளனர்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம் கூறியபோது, "புயலால் சாய்ந்த தென்னை மரங்களை நிமிர்த்தி நடும்போது அவை மீண்டும் புத்துயிர் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள தென்னை மரங்களில் 100 வேர் கள் இருந்தால் போதும். அவற்றை 'பொக்லின்' இயந்திரம் மூலம் 70 டிகிரி கோணத்தில் அதாவது சற்று சாய்வாகத் தூக்கி நிறுத்தி மண் நிரப்பவேண்டும். அத்துடன் மரங்களின் சாய்வான பகுதியில் மூங்கில், சவுக்குக் குச்சிகள், கருங்கல் கொண்டு முட்டுக் கொடுக்கலாம்.

வானுயர வளர்ந்த தென்னைகள் வேரோடு நிலத் தில் சாய்ந்தன. அவற்றை உயிர்ப்பிக்க வழி கூறும் டாக்டர் வா.செ.செல்வம் (உள்படம்).