சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் புதிய உதவிச் செயல்திட்டம்

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் புதிய உதவிச் செயல்திட்டம்

2 mins read

சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் அதிநவீன தொழில்நுட் பங்களைத் தழுவிக்கொள்ள உதவும் வகையில் புதிய செயல் திட்டம் தொடங்கப்படுகிறது. கோகிளவுட் (GoCloud) என்ற அந்தச் செயல்திட்டம், கணினி இணையக் கட்டமைப்பில் மென் பொருள் மற்றும் பல செயலிகளைத் தங்கள் தேவைக்கேற்ப வடிவமைக் கும் வாய்ப்பைச் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தந்து உதவும். இதன்மூலம் அந்த நிறுவனங் கள், தங்களுடைய செயலிகளை வேகமாக மாற்றி அமைத்துக் கொண்டு திறமையாக செயல்பட முடியும். தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று இந்தப் புதிய செயல்திட்டம் பற்றி அறிவித்தார்.

இந்தத் திட்டம் அதிநவீன தொழில்நுட்பம்போல் தோன்றும். இருந்தாலும் எந்த ஒரு நிறுவன மும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்ற வகையில் செயலிகளை உரு வாக்கிக்கொண்டு திறம்படச் செயல்படலாம் என்றார் அமைச்சர். தகவல் தொடர்பு ஊடக மேம் பாட்டு ஆணையத்தின் சிங்கப்பூர் மின்னிலக்கத் தொழில்துறை தினத்தில் உரையாற்றிய அமைச்சர் இந்தப் புதிய செயல்திட்டம் பற்றிய பல விவரங்களையும் அறிவித்தார். கோகிளவுட் திட்டத்தில் சேரும் சிறிய, நடுத்தர நிறுவனங் கள் முதலில் இந்தப் புதிய ஏற்பாடு பற்றிக் கற்றுக்கொண்டு, ஒரு வல்லுநருடன் சேர்ந்து செயல்படும் என்று இந்த ஆணையம் தெரிவித் துள்ளது.

இதன் மூலம் அந்த நிறுவனங் கள் இந்தப் புதிய தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி எப்படி எல்லாம் ஒரு திட்டத்தை உருவாக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளும். பிறகு செயலிகளை வடிவமைத்து தங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிறு வனங்கள் உரு வாக்கலாம். இந்தப் புதிய ஏற்பாடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள், மின்னிலக்கச் சேவைகளை வழங் கும் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட உதவும் புதிய இரண் டாண்டுச் செயல்திட்டம் ஒன்றை யும் அமைச்சர் திரு ஈஸ்வரன் அறிவித்தார். மின்னிலக்கச் சேவை சோதனைக்கூடம் என்ற இந்தச் செயல்திட்டம் இந்தத் தொழில் துறையையும் ஆய்வு பங்காளி நிறுவனங்களையும் இணைத்து பல மின்னிலக்கச் சவால்களுக்குத் தீர்வுகாணும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.