சில்க்ஏர் விமான நிறுவனம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத் துடன் (எஸ்ஐஏ) ஐக்கியமாக விருக்கிறது. அதற்கு முன்னதாக அடுத்த இரண்டாண்டு காலத் தில் சில்க்ஏர் நிறுவனத்தின் சில வழித்தடங்களை ஸ்கூட் நிறு வனம் ஏற்றுக்கொள்ளும். எஸ்ஐஏ நிறுவனத்தின் மலிவுக் கட்டண நிறுவனமான ஸ்கூட், தன்னுடைய சேவைகளில் சில வற்றை, இப்போது எஸ்ஐஏ நிறு வனமும் சில்க்ஏர் நிறுவனமும் சேவையாற்றி வரும் வழித்தடங் களுக்கு மாற்றிவிடும்.
இந்த மாற்றங்கள் 2019 ஏப்ரல் மாதத்திற்கும் 2020 பிற்பகுதிக்கும் இடையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எஸ்ஐஏ நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஒருபுறம் இருக்க, இதர பல கட்டமைப்பு மாற் றங்களும் இடம்பெறும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இடம்பெறும் இந்த மறுபரிசீலனைகள் நீண்டகால அடிப் படையில் எஸ்ஐஏ குழுமத்தைப் பலப்படுத்தும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியாவின் கோயம் புத்தூர், திருவனந்தபுரம், விசாகப்பட் டினம் ஆகிய நகர்களுக்கு சில்க்ஏர் நிறுவனம் இப்போது வழங்கும் சேவைகள், 2019 மே மாதத்திற்கும் 2019 அக்டோபருக்கும் இடையில் ஸ்கூட் நிறுவனத்திற்கு மாறும்.
ஸ்கூட் நிறுவனத்தின் சேவைகள் விரிவடைகின்றன. சில்க்ஏர் நிறுவனத்திடமிருந்து 14 போயிங் 737-800 ரக விமானங்களை ஸ்கூட் பெறுகிறது. சில்க்ஏர் நிறுவனம் புதிய போயிங் 737 மேக்ஸ்8 விமானங்களுடன் சேவையை விரிவுபடுத்தும். படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

