சென்னை: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் மூவரை ஆளுநர் விடுதலை செய்ததற்கான காரணம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மூவர் விடு தலைக்குக் காரணம் தமிழகத்தை ஆளும் அரசின் நிர்ப்பந்தமா? அல்லது மத்திய அரசின் அரசியல் நிர்ப்பந்தமா? என மக்கள் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட் டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் எழுவரை விடு விக்க ஒப்புதல் வழங்காத ஆளுநர், கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற அதிமுக நிர் வாகிகளை மட்டும் விடுதலை செய்திருப்பதாக விஜயகாந்த் சுட்டிக் காட்டியுள்ளார். "பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரை ஆளு நர் ஏன் விடுதலை செய்யவில்லை? 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்," என்று விஜய காந்த் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா, கொடைக்கானல் பிள சண்ட் தங்கும் விடுதி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவி மாண விகள் பேருந்தில் பயணம் செய்த போது அவர்களை உயிரோடு எரித்துக் கொன்ற மூவரையும் தமி ழக அரசின் சிபாரிசுடன் ஆளுநர் விடுவித்துள்ளதாக விஜயகாந்த் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

