அமைச்சர், முதல்வருடன் சைக்கிள் ஓட்டிச்சென்ற சல்மான்

அமைச்சர், முதல்வருடன் சைக்கிள் ஓட்டிச்சென்ற சல்மான்

1 mins read
1e050fad-352a-4605-afda-cccd6b30d067
-

தீப்ருகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலா தூதுவராகத் தொண்டாற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா கண்டூ ஆகியோருடன் சீன எல்லைவரை சைக்கிளில் மகிழ்உலா சென்றார். தீப்ருகர் விமான நிலையத் தில் இருந்து சீன எல்லையைத் தொடும் மெச்சூகா பகுதியை சல்மான் கான் அடைந்தார். அருணாச்சலப்பிரதேசத் தில் நடந்த 14 நாள் மெச்சூகா கலாசார விழாவை முன்னிட்டு இந்த சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திருவிழாவுக்காக சல்மான் கான் ரூ.22 லட்சம் கொடையளித்தார்.

சைக்கிளில் செல்லும் நடிகர் சல்மான் கான் (நடு), உள்துறை துணை அமைச்சர் கிரண் (வலது), அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா கண்டூ ஆகியோர். படம்: ஏஎஃப்பி