கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

1 mins read

மும்பை: உணவில் கலப்படம் செய்வோர் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்வதோடு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கிரிஷ் பாபத், சட்டப் பேரவையில் இதனை அறிவித்தார். ஏற்கெனவே நடப்பில் இருக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து, உணவில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத் திருத்தம் சட்டப்பேரவைக் கூட்டம் முடிவதற்குள் நிறைவேறும் என்றார் அமைச்சர்.