250 மீ. உயரத்துக்கு ஆந்திரா சட்டமன்ற கட்டடக் கோபுரம்

250 மீ. உயரத்துக்கு ஆந்திரா சட்டமன்ற கட்டடக் கோபுரம்

1 mins read

ஹைதராபாத்: ஆந்திரப்பிரதேச அரசாங்கம் புதிய அமராவதி நகரில் கோடானுகோடி பொருட் செலவில் சட்டமன்றக் கட்டடத்தை எழுப்பவிருக்கிறது. உத்தேசிக்கப்பட்டு இருக்கும் அந்த மூன்று மாடி கட்டடத்தின் கோபுரம், 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையைவிட உயரமாக 250 மீட்டர் அளவுக்கு மேலே எழும்பி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டேலின் சிலையை அண்மையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் திறந்துவைத்தார்.

அதனையடுத்து உத்தரப்பிர தேச மாநிலத்தில் ராமருக்கு 201 மீட்டர் உயரத்தில் சிலை எழுப்பப் படும் என்று அந்த மாநில முதல்வர் அறிவிப்பு விடுத்தார். அதற்குப் பிறகு காவேரி தாய்க்கு 38.1 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு அறிவித்தது. முன்னதாக, பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜிக்கு நினைவுச் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்தச் சிலை ரூ.3,600 கோடி செலவில் 203 மீட்டர் உயரத்துக்கு எழும்.