புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் முசாஃபர்பூர் நகரில் செயல்பட்டு வந்த சிறார் விடுதி ஒன்றில் நடந்த பாலியல் கொடுமைகள் அம்பலமானதைத் தொடர்ந்து மாதர், சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சு, நாட்டில் இதுவரையில் 539 சிறார் பராமரிப்பு நிலையங் களை இழுத்து மூடிவிட்டது. பீகாரில் சிறார் விடுதியில் இருந்த 34 சிறுமிகள் தவறான முறையில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தக வல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாயின.
அதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து சிறார் பராமரிப்பு நிலையங்களிலும் சோதனைகளை நடத்தும்படி எல்லா மாநிலங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. அதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 377 நிலையங்களும் ஆந்திராவில் 78 நிலையங்களும் மூடப்பட்டன. தெலுங்கானா மாநி லத்தில் செயல்பட்டு வந்த 32 சிறார் பராமரிப்பு நிலையங்களின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் 20 நிலை யங்களுக்கும் கர்நாடகாவில் 21 சிறார் பராமரிப்பு நிலையங்களுக் கும் இதே கதி ஏற்பட்டதாக மாதர், சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தெரசா அம்மையார் ஏற்படுத் திய அறப்பணி அமைப்புகள் நிர்வகித்து நடத்தும் சிறார் பரா மரிப்பு நிலையங்கள் அனைத்திலும் உடனடி சோதனைகளை நடத்தும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. ஜார்கண்ட் மாநிலம் இத்தகைய ஒரு நிலையத்தை மூடிவிட்டது. பெண் துறவி ஒருவர் கைதானார். அரசாங்கம் மூடியிருக்கும் நிலையங்கள் முழுமையாக ஆரா யப்பட்டு வருவதாகவும் அத்தகைய நிலையங்களில் உள்ள குறைபாடு கள் அடையாளம் காணப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவருவதாகவும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

