திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச் சினையில் சமூக வலைத் தளங்கள் மூலம் போராட்டத்தைத் தூண்டியதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் அதிகமான ஃபேஸ்புக் கணக்குகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதுவரை இளம் பெண்கள் கோயிலில் நுழைய முடியவில்லை.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் போராட்டத்தைத் தூண்டிய சுமார் 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தைத் தூண்டும் வகை யில் தகவல்களைப் பதிவிட்டு வரும் 1000க்கும் மேற்பட்ட 'பேஸ் புக்' கணக்குகள் கண்டறியப் பட்டுள்ளன. அந்தக் கணக்கு களைக் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். இதற்கிடையே சபரி மலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி நான்கு இளம் பெண்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் பெண்கள் மட்டும் வழிபட இரண்டு நாள் ஒதுக்க முடியும் என்று கேரள அரசு யோசனை தெரிவித்தது.

