தொடர் கனமழையால் நிரம்பி வழியும் ஏரிகள், பாலம் உடைந்தது

தொடர் கனமழையால் நிரம்பி வழியும் ஏரிகள், பாலம் உடைந்தது

2 mins read

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்- பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த மூன்று நாட்களாக அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கன- மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் காலையில் இருந்து விடிய விடிய பலத்த மழை பெய்ததால், புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சேதத்தில் இருந்து மீள முடியாத நிலையை அடைந்தன. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கி உள்ளது. இதிலிருந்து அவர்கள் மீண்டுவர இன்னும் காலமாகும் என்ற அவல நிலை உருவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டிய மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்த மின்கம்பங்களைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மின் ஊழியர்களும் பணியில் ஈடு- பட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்குத் தண்ணீர் தேங்கியதாக தெரிவிக் கப்பட்டது. இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பொதுப் பணித்- துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அந்த மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் தொடர்ந்து நீர்- வரத்து வந்த வண்ணம் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும், ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை- யாக பலவீனமாக உள்ள ஏரிக் கரைகள், நீர்வரத்துக் கால்வாய் போன்றவற்றைப் பொதுப் பணித்- துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. மழையில் பல பள்ளிக் கட்டடங்- களும் சேதம் அடைந்துள்ளன. எனவே மழை நின்ற பின்னரும் அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்ன- தாக, தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமியுடன் மத்தியக் குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளி யாகின.