இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; முறியடித்த இந்திய ராணுவம்

இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; முறியடித்த இந்திய ராணுவம்

1 mins read

காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வர்களில் இருவரை இந்திய ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இந்தியா= பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியான நவ்காம் பகுதியில் நிகழ்ந்தது. மாண்ட இருவரும் பாகிஸ்தான் ராணுவச் சீருடைகளை அணிந் திருந்தனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளா அல்லது பாகிஸ்தான் ராணுவச் சீருடையில் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளா என்பதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாண்ட இருவரும் போரில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக வும் அவற்றை இந்திய ராணுவம் பறிமுதல் செய்துள்ளதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்தது. பனிக்காலம் என்பதால் காஷ்மீர் எல்லைப்பகுதியில் தற்போது கடுமையாகப் பனி பொழிந்து வருகிறது. எல்லையோரப் பாது காப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி களின் ரோந்துப் பணியை இது சிரமமானதாக்கியுள்ளது.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லைப்பகுதியில் உள்ள அடர்த்தியான வனப்பகுதி வழியாகச் சிலர் நேற்று அதிகாலை இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இந்திய ராணுவ அதிகாரிகளின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தரப்பு குற்றம் சுமத்துகிறது. ஊடுருவல்காரர்கள் இந்தியா வுக்குள் நுழைய முயன்றுகொண்டி ருந்தபோது இந்திய ராணுவத் தினரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இந்திய வீரர்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டனர்.