கல்யாண்: பெண் ஒருவரால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மூன்று நாட் களுக்குப் பின் உயிரிழந்தார். ஒரு குடும்பப் பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வகையில் அந்த ஆடவர் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டிருந்த ஆடவர் சிகிச்சைப் பல னின்றி உயிரிழந்தாகப் போலிசார் ஞாயிறன்று தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், கிழக்கு டோம்பிவில்லி அருகேயுள்ள யஷ்வந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துஷார் புஜாரே, 27. வீட்டுக்கடன் வாங்கித்தரும் ஆலோசகராகப் பணியாற்றிவந்த புஜாரே, அப்பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் வெறுப்படைந்த பெண் புஜாரேயின் அந்தரங்க உறுப்புகளைத் துண்டித்தார்.
புஜாரேவை வீட்டுக்கடன் தொடர்பாக பேசவேண்டும் எனக் கூறி நந்திவாலி ஹில் பகுதிக்கு பெண்ணும் அவரது இரண்டு ஆண் நண்பர்களும் தேஜாஸ் மெகாத்ரே, 25, பிரதீக் கெனியா, 22, வரவழைத்தனர். அங்கு ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் இளையர்கள் அவரை இறுக்கிப் பிடித்துக்கொள்ள பெண் கத்தியால் அவரது அந் தரங்க உறுப்பை துண்டித்தார். அதன்பின் புஜாரேயை பெண் மருத்துவனையில் அனுமதித்தார். தனது குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். புஜாரே அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மூவரும் கைதாகினர். விசாரணையின்போது, புஜாரே பெண்ணிடம் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு பெண் இணங்காமல் போகவே பெண்ணின் கணவரை புஜாரே இந்த விஷயம் தொடர்பாக அணுகியுள்ளார். இதில் கடும் கோபமடைந்த பெண் புஜாரேவுக்கு இப்படி பாடம் கற்பித்தார்.

