நாயுடு: ராவை மிரட்டுகிறார் மோடி

நாயுடு: ராவை மிரட்டுகிறார் மோடி

1 mins read
a885396c-3084-45c0-bec0-2fdfb925832b
-

அமராவதி: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வசை மொழி களில் தரக்குறைவாகத் தன்னை விமர்சனம் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திர பாபு நாயுடு, சந்திரசேகர ராவை பிரதமர் மோடி மிரட்டி பணியவைக்கிறார் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "கே.சந்திரசேகர ராவ் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவரை பிரதமர் மோடி மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறார். "சந்திரசேகர ராவும் ஊழல் வழக்கில் இருந்து தன்னைக் காப் பாற்றிக் கொள்வதற்காக பாஜக வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். "ஆந்திராவில் தெலுங்குதேசம் அரசின் சாதனைகளால் பொறாமை அடைந்துள்ள மோடியும் ஜெகன் மோகன் ரெட்டியும் சந்திரசேகர ராவைத் தூண்டிவிட்டுள்ளனர்.

"அரசியல்வாதிகள் எப்போதுமே கௌரவத்தையும் நல்ல ஒழுக்கங் களையும் அவர்களது வாழ்க்கை யுடன் வார்த்தைகளிலும் கடைப் பிடிக்கவேண்டும். சந்திரசேகர ராவ் பேசும் வார்த்தைகள் மிகவும் மோசமாக உள்ளது. நாகரிக சமுதாயம் இதை ஒருபோதும் அனுமதிக்காது. இது ஒரு நல்ல பண்பு அல்ல. எல்லாருக்கும் வாய் உள்ளது. எல்லாராலும் பேசமுடியும். "அதுவும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபர் அதிக மதிப்பு, மரியாதையுடன் நடந்துகொள்வது முக்கியம்," என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்த கேசிஆர் என்றழைக்கப்படும் சந்திரசேகர ராவ், "நாட்டிலுள்ள அரசியல் வாதிகளில் மிகவும் அசிங்க மானவர் சந்திரபாபு நாயுடு. ஊழல் மிகுந்தவர். பொய்யான அரசியல்வாதி. அவர் ஒரு தலைவர் அல்ல.