மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக வெளியான தகவலால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார் செந்தில் பாலாஜி. அண்மையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். இதையடுத்து இவர் எம்எல்ஏவாக இருந்த அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தினகரன் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர்: தினகரன் தரப்பு அதிர்ச்சி
1 mins read

