சென்னை: ஒரே நாளில் 4 கோவில்களில் கொள்ளையர்கள் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது கோவை வட் டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூரை அடுத்துள்ள கலங்கல் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன், வீரமாச்சியம்மன், காமாட்சி அம்மன் கோவில் கள் உள்ளன. இக்கோவில்கள் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தரு கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர் கள் சிலர் 4 கோவில்களின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து, கோவில் சிலைகளில் இருந்த தங்கத் திருமாங்கல் யங்கள் உள்ளிட்ட நகைகளையும், கோவில் தட்டில் இருந்த காணிக்கைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் 5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் திருடு போயின.
ஒரே நாளில் நான்கு கோவில்களில் கொள்ளை
1 mins read

