எச்1என்1 காய்ச்சல்: 6ஆம் இடத்தில் தமிழகம்

எச்1என்1 காய்ச்சல்: 6ஆம் இடத்தில் தமிழகம்

1 mins read

சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது எச்1என்1 காய்ச்சலும் வேகமாகப் பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இக்காய்ச்சல் பாதிப்புள்ளது. மகாராஷ்டிராவில் 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 பேர் உயிரிழந் துள்ளனர். அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் 2,463 பேருக்கு இக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டில் இந்தப் எச்1என்1 காய்ச்சலுக்கு 97 பேர் பலியாகி உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் உரிய சிகிச்சை பெற்றால் இக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து எளிதில் விடுபடலாம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.