அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணைய வேண்டும் - டிடிவி தினகரன்

அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணைய வேண்டும் - டிடிவி தினகரன்

1 mins read

நெல்லை: அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கருத்து வரவேற் கத்தக்கது என டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் இணைய வேண்டும் என பாஜக தலைமை எதிர்பார்ப்பதாகவும் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார். அதிமுக தனித்துத் தேர்தலை எதிர்கொண்டால் தோல்வியைத் தழுவும் என பாஜக தலைமை கருதுகிறது என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக இருப்ப தால் அதை எதிர்க்க வலுவான மற்றொரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என பாஜக நினைப்பதாக வும் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார்.

"இரு கட்சிகளும் இணைவதை வரவேற்கிறோம். எனினும் அதற்கு முன்பாகத் தமிழக முதல்வர், ஊழல் அமைச்சர்களை மாற்ற வேண்டும். இதுவே எங்களது முக் கியக் கோரிக்கை. அமமுகவைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற கட்சிகளை நிச்சயம் ஆதரிப்போம்," என்றார் தங்கத் தமிழ்ச்செல்வன். பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அமமுகவை அக் கட்சியுடன் இணைக்கத் தயார் என்றார். "தமிழகத்திற்கு நல்ல திட்டங் களைக் கேட்டு முதல்வர் அவ்வப் போது டெல்லிக்குச் செல்வதாகத் தெரிய வில்லை என்றும் மத்திய அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க தமிழக அரசுக்கு கொஞ்சம் கூடத் துணிவு இல்லை என்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவித்தார்.