இடைத்தேர்தலுக்கு தடை இல்லை: நீதிமன்றம் அதிரடி

இடைத்தேர்தலுக்கு தடை இல்லை: நீதிமன்றம் அதிரடி

1 mins read

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை ஏதும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத் தேர்தல் ஆணையம் அண்மையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதையடுத்து டிடிவி தினகரன் தனிக்கட்சி துவங்கி அதன் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக எல்எல்ஏக்கள் 18 பேர் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதையடுத்து அவர்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.