ராகுல், ஸ்டாலின் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு உடன்பாடு

புதுடெல்லி: திமுக தலைவரானபின் டெல்லிக்கு முதல்முறையாகச் சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியை டெல்லி, அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டை, அண்ணா அறி வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கரு ணாநிதியின் முழு உருவச் சிலையை வரும் 16ஆம் தேதி ஞாயிறன்று திறந்து வைக்கும்படி நேரில் அழைப்பு விடுத்தார்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வுக்கு எதிராக பிரம்மாண்ட கூட் டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பாக டெல்லியில் நடை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் களின் கூட்ட ஆலோசனையிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சோனியா-ஸ்டாலின் சந்திப் பின்போது தமிழகம், புதுச்சேரி யில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுகவுக்கு 25; காங்கிரஸ் மற்றும் அதனுடன் சேரும் கட்சிகளுக்கு 15 தொகுதி களை ஒதுக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சால்வை அணிவித்தார் மு.க.ஸ்டாலின். இந்தச் சந்திப்பின்போது, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!