ரஜினி: பாஜக செல்வாக்கை இழந்துள்ளது

ரஜினி: பாஜக செல்வாக்கை இழந்துள்ளது

1 mins read

சென்னை: மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாகக் கூறியுள்ளார். மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், பாஜக செல்வாக்கை இழந்த தையே ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. அத்துடன் இந்த முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.