தமிழ் படித்தால் மாதம் ரூ.2,000 உதவிநிதி

தமிழ் படித்தால் மாதம் ரூ.2,000 உதவிநிதி

1 mins read

சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முது கலை பட்டப்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 உதவி நிதியாக வழங்கப்படுகிறது. சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலை ஏற்புடன் தமிழ் முதுகலையில் திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் உள்ளிட்ட பிஎச்டி படிப்புகள் உள்ளன. தமிழ் முதுகலை பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.