தேனி: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டாம் போக சாகு படிக்கான நடவுப் பணிகளை இயந்திரத்தின் மூலம் விவசாயிகள் செய்து வருகின்றனர். இதேபோல் சின்னமனூர் கருக்கட்டான்குளம் பகுதியில் விவசாயிகள் இயந்திரத்தின் மூலம் நடவு செய்யத் தொடங்கியுள்ளனர். "இயந்திரத்தின் மூலம் நடவு செய்வதால் விவசாயிகளுக்கு அதிகப்படியான மகசூல் கிடைக்கிறது. மேலும் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியமும் தமிழக அரசு வழங்குகிறது. நடவு முடியும் வரை விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்," என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இயந்திர நடவுக்கு ரூ.10,000 மானியம்
1 mins read

