போலி ஆதார் அட்டையுடன் பணிபுரிந்த 15 இளையர்கள் கைது

போலி ஆதார் அட்டையுடன் பணிபுரிந்த 15 இளையர்கள் கைது

2 mins read

திருப்பூர்: முறையான ஆவணங்கள் இன்றி போலியான ஆதார் அட்டை களைப் பயன்படுத்தி திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணி யாற்றி வந்த பங்ளாதேஷ் இளை யர்கள் 15 பேர் கைது செய்யப்பட் டனர். இவர்களில் 12 பேர் வைத் திருந்த போலி ஆதார் அட்டை களும் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவப் பட்டி பகுதியில் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆட்கள் சிலர், பாஸ்போர்ட் உள்ளிட்ட எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வேலம் பாளையம் காவல்நிலையத்தினர் நடத்திய சோதனையில் பங்ளா தேஷ் நாட்டைச் சேர்ந்த சபுஷ், அப்துல் ர‌ஷிஷ் ஆகிய இருவரை யும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட ஆவ ணங்கள் இன்றி சட்டவிரோத மாக தங்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை சென்னைப் புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிறு பூலுவபட்டிப் பகுதியில் திரிந்த 12 பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் முகமது சலீம் காஜி என்பவர் 2017ம் ஆண்டு கள்ளத் தோணி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்து, அதன்பின் திருப்பூர் வந்து பனியன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தது தெரியவந்தது. தனக்கு நல்ல வருமானம் கிடைத்த நிலையில், பங்ளாதே‌ஷில் இருந்து ஆட்களைச் சட்ட விரோத மாக கள்ளத் தோணி மூலம் வரவழைத்து, உரிமையாளர்களிடம் கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டு பனியன் நிறுவனத்தில் ஆட்களைச் சேர்த்துவிட்டதை முகமது சலீம் ஒப்புக்கொணடார். அவர் அளித்த தகவல்படி பஜ்லுல் ஹக், முகமது ரோனி ஷேக், முகமது ரிடாய் ஷேக், முகமது ரசிதுல் ஹக், முகமது லிடான், பஷார், முகமது ராபின் ஹுசைன் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.