சபரிமலை சன்னிதானத்தில் பொருத்துவதற்காக தேக்கு மர கதவு கொண்டு வரப்பட்டது. கோயில் கட்டுமானப் பணி நிபுணரான குருவாயூர் இளவள்ளி நந்தன், தேக்கு மர கதவைத் தயாரித் துள்ளார். இந்தக் கதவு இளவள்ளி சாஸ்தா கோயிலில் வைக்கப் பட்டிருந்தது. இது சபரிமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. கதவு பொருத்தும் பட்சத்தில் கூடுதலாக சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்படும். ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டு தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டு பின் இளவள்ளி கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு சபரிமலையில் பொருத்தப்பட உள்ளது. படம்: ஊடகம்
சபரிமலை சன்னிதானத்தில் தேக்கு கதவு
1 mins read
-

