சட்டீஸ்கரில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது

சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் உருவாக் கப்பட்ட பின் 2000 முதல் 2003ம் ஆண்டுவரை மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது அஜித் ஜோகி முதல்வராக இருந்தார். அதன்பின் 2003 முதல் 2018ம் ஆண்டு வரை பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு முதல்வராக ராமன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், 90 தொகுதி களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந் தது.

76.5 விழுக்காடு வாக்கு கள் பதிவாகின. தேர்தல் முடிந்ததை யடுத்து, நேற்று வாக்கு எண் ணிக்கை நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, அஜித் ஜோகி தலைமை யி லான ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர், கோண்ட்வானா கண்ட்தந்திரா கட்சி ஆகியவை போட்டியிட்டன. தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து அஜித் ஜோகி போட்டி யிட்டதால், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய தில் இருந்து அனைத்துக் கணிப்பு களையும் உடைத்து எறிந்து காங் கிரஸ் முன்னிலை பெற்றது. காலையில் இருந்து அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன் னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணைய இணையத் தளத்தின்படி, காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பாஜக 17 தொகுதிகளிலும், அஜித் ஜோகி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தது.

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காங்கிரசின் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!