நொய்ப்பிடா: இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மியன்மார் வந்துள்ளார். மியன்மார் அதிபர் உவின் மின்ட்=ஐ நேற்று சந்தித்த அதிபர் ராம்நாத், மியன்மாருக்கும் இந்தி யாவுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். நீதித்துறை பயிற்சி, அறி வியல் மற்றும் தொழில்நுட்பத் துறை யில் இருநாடுகளுக்கும் இடை யிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், அண்மையில் கலவர பூமியாக இருந்த ரக்கினே மாநி லத்தில் இந்தியா கட்டியுள்ள 250 வீடுகள் மியன்மார் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மியன்மாரில் அமைதியை ஏற் படுத்தும் திட்டங்களுக்கு இந் தியா உறுதுணையாக இருக்கும் என்றும் அதிபர் ராம்நாத் உறுதியளித்தார்.
மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நேற்று சந்தித்துப் பேசினார். படம்: ராய்ட்டர்ஸ்

