ஒரு வெள்ளி கையூட்டு பெற்றதாக இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

1 mins read

ஒரு சிங்கப்பூர் வெள்ளியை கை யூட்டாகப் பெற்றதாக, பளு ஏற்றும் வாகனத்தை இயக்கும் இரு ஓட்டுநர்கள் மீது நேற்று நீதிமன் றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டது. சென் ஸிலியாங், சாவ் யூகுன் ஆகிய இருவரும், 'கோஜென்ட்' கொள்கலன் கிடங்கில் பளு ஏற்றும் வாகனத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் அதே கிடங்கில் பணிபுரியும் கனரக வாகன ஓட்டுநர்களிடமிருந்து, சிறிய அளவிலான தொகையைக் கையூட்டாகப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அந்த விவரங் கள் தெரிவிக்கப்பட்டன. கனரக வாகன ஓட்டுநர் களிடம் கொள்கலன்களை உரிய நேரத்தில் திருப்பிக்கொடுப்பதற்கு ஒரு வெள்ளி கையூட்டுப் பெற்று வந்ததாகக் சென் மீது குற்றம்சா ட்டப்பட்டுள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg