சென்னை: மத்தியில் பாஜக தலைமையிலான பாசிச ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித் துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இது தொடர்பான முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும், தேசிய அளவில் பாஜக வுக்கு எதிராக மிகப்பெரிய கூட் டணி அமைத்து போராட வேண் டும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், மேற்கண்ட கருத்துகளை முன்வைத்ததாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங் கள் குறித்து ஆராயப்பட்டதாக குறிப்பிட்ட ஸ்டாலின், மத்தியில் பாஜக ஆட்சி மட்டுமல்லாமல், ஆர்எஸ்எஸ் ஆட்சியும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித் தார்.
"காங்கிரஸ் கட்சித் தலைமை யில் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி விலகி யதாக செய்தி வந்தது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இதுவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் இருவர் பதவி விலகி உள்ளனர். "ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த ரகுராம் ராஜன் பதவி விலகியது நாட்டிற்குத் தெரியும். இப்போது உர்ஜித் படேலும் பதவி விலகியுள்ளார். மோடி ஆட்சியில் ரிசர்வ் வங்கி ஆளுநர்களே பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளனர். அப்படிப்பட்ட ஆட்சியின் நிலையைப் பற்றி நாடு இப்போது நன்றாகப் புரிந்துகொண்டிருக் கிறது," என்றார் ஸ்டாலின்.

