மதுரை: வாடிக்கையாளருக்கான உணவைச் சாப்பிட்ட ஊழி யரை ஜொமோட்டோ நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இந்நிறுவ னத்தின் மதுரைப் பிரிவு ஊழியர் வாடிக்கை யாளருக்கான உணவைச் சாப்பிட்டு விட்டு மீதமுள்ள உணவை எடுத்துச் செல் லும் காட்சியை ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதையடுத்து ஊழியரை பணி நீக்கம் செய்த ஜொமோட்டோ, இனி வாடிக்கையாளர்க ளுக்கு கூடுதல் பாதுகாப்புடன் உணவைச் சேர்ப்பதற்கான நட வடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலை யில் பசியால் தவறு செய்தவருக்கு இது அதிகபட்ச தண்டனை என்று பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
வாடிக்கையாளருக்கான உணவைச் சாப்பிட்ட ஊழியர்: பணி நீக்கம்
1 mins read

