சென்னை: தலைக்கவசம் அணிந்து வந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடும் இளையரைப் பிடிக்க போலிசார் வலை விரித்துள்ளனர். கடந்த சில தினங்களாக சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர், தலைக்கவசம் அணிந்தபடி நுழைந்து எரிவாயு சிலிண்டர்களைத் திருடிச் செல்கிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்னர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில் அந்த இளையர் சிலிண்டரைத் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதை வைத்து அவரைத் தேடி வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
தலைக்கவசம் அணிந்து 'சிலிண்டர்' திருடும் இளையருக்கு வலைவீச்சு
1 mins read

