காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாயாவதி ஆதரவு

2 mins read
359d7eef-626b-4f89-9435-8a37b2422abb
-

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்தி பென் படேலிடம் கமல்நாத் தலைமையில் திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் சென்று கடிதம் கொடுத்தனர். படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க இரண்டு இடங் கள் குறைந்த நிலையில் மாயாவதி ஆதரவு அளித்ததால் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆளு நரை அணுகியுள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழு மையாக வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டீஸ்கரில் அபார வெற்றி பெற்று உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கமல் நாத் கடிதம் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும் சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி யமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதிக இடங் களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்ப ட்டது. காங்கிரஸுக்குச் சமாஜ் வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்த தால் போதிய பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

இதையடுத்து, மாநில காங் கிரஸ் கமிட்டித் தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மதியம் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்தி பென்படேலிடம் கடிதம் அளித் தனர். இந்தச் சந்திப்பின்போது திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந் தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் நாத், "காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக் களின் ஆதரவு உள்ளது." என்றார் இதற்கிடையில் "5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிசுஸுக்குக் கிடைத்த வெற்றி," எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg