புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்த தற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சிலை கடத்தல் வழக்கில் அனைத்துலக அளவில் தொடர்பிருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். ஓய்வு பெற்ற அதிகாரியை பதவியில் தொடருமாறு உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்கமுடியும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதி மன்றம் பொன்.மாணிக்கவேல் பணிநீட்டிப்புக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
பொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
1 mins read

