கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மலேசிய வியாபாரி ஜோ லோவுக்குச் சொந்தமான 'இக்குவானி மிட்டி' எனும் கப்பல் 130 மில்லியன் அமெரிக்க டாலர் (178 மில்லியன் வெள்ளி) என குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மலேசிய அரசாங்கத்தை பிரதிபலிக்கும் வழக்கறிஞர் சிட்பா இதனை தெரிவித்தார். சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்ட கப்பலை விற்க தனிப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார் அவர். இந்தக் கப்பலில் 22 விருந்தினர்களும் 31 கப்பல் சிப்பந்திகளும் தங்க முடியும். நீச்சல் குளம், சிகை அலங் கார அறை, உடற்பிடிப்பு வசதி, ஹெலிகாப்டர் இறங்கும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு ஜோ லோவுக்குச் சொந்தமான உல்லாசக்கப்பலை கைப்பற்றிய மலேசிய அரசாங்கம் அதனை ஏலம் மூலம் விற்க முடிவு செய்தது.
ஜோ லோ கப்பல் விலை $178 மி.
1 mins read

