நடுவானில் பாலியல் தொல்லை: தமிழ்நாட்டு ஆடவருக்கு ஒன்பது ஆண்டு சிறை

தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒரு வருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக பிரபு ராமமூர்த்தி, 35, (படம்) என்னும் அவருக்கு டெட்ராய்ட் நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த தண்டனையை அறிவித்தது. லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட்டுக்கு இரவு நேரத்தில் ராமமூர்த்தி தமது மனைவியுடன் விமானப் பயணம் மேற்கொண் டார். அவரது இருக்கைக்கு அருகே இளம்பெண் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்தப் பெண்ணுக்கு ராமமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனை உணர்ந்த அந்தப் பெண் அதிர்ச்சியுடன் விழித்தார். அப்போது தமது காற்சட்டை பொத்தான்கள் கழற்றப்பட்டு ‘ஜிப்’ இறக்கப்பட்டு இருப்பதைக் கண் டார். உடனடியாக விமானப் பணி யாளர்களை உதவிக்கு அழைத் தார் அவர். பின்னர் போலிசிடம் விவரம் தெரிவிக்கப்பட்டு ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார். டெட்ராய்ட் நீதிமன்றத்தில் ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அப்போது தண்டனை அறிவிக் கப்படவில்லை. பெண் பயணிக்கு பாலியல் தொல்லை என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று வாதிட்ட அரசு தரப்பு வழக்கறி ஞர்கள் ராமமூர்த்திக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை கோரினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்