பொதுத்துறை நிறுவனங்களில் வடஇந்தியர்கள் ஆதிக்கம்: ராமதாஸ் கடும் கண்டனம்

2 mins read
50522a19-9810-4329-a85f-0299342879b8
-

சென்னை: தமிழக மக்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் எழுப்­பப்பட்ட மத்திய°பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய போக்கு தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செயல்பட்டு வரும் பெட்ரோலிய நிறுவனத்தில் 8 வகையான பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு அண்மையில் வெளி யிடப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வேதியியல் பொறியாளர் பணிக்காக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்லர் எனக் குறை கூறியுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வரை சென்னை பெட்ரோலிய நிறுவனத்துக்கான பணியாளர்க ளும் அதிகாரிகளும் தமிழகத்தில் இருந்து தான் முழுமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் என்றும், தற்போது பல்வேறு பணி களுக்கு வடஇந்தியர்கள் படிப் படியாக உள்ளே திணிக்கப்படுவ தாகவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

"இப்போது பெட்ரோலிய நிறு வனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரி களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் போட்டித் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, அதன் மூலம் தான் வட இந்தியர்கள் பெட்ரோலிய நிறுவ னத்தில் அதிகாரிகளாக நியமிக்கப் படுகின்றனர். இதற்கு அதன் நிர்வாகமும் துணை போகிறது. "அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர்கள் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளிலும்கூட வடமாநிலத்த வர்கள் திட்மிட்டுத் திணிக்கப்படு கின்றனர்," என்று ராமதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் நூறு விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்படா விட்டால் பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும் எனவும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.