பத்திரங்கள் ஒருமணி நேரத்தில் கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் தற்போது பத்திரப் பதிவு, இணையம், கணினி உதவியுடன் நவீன முறை யில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்திரங்களைப் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் அவற்றைத் திரும்ப வழங்கும் திட்டம் வரும் 17ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என மாநிலப் பதிவுத் துறைத் தலைவர் குமர குருபரன் தெரிவித்துள்ளார். பத்திரப் பதிவுத் துறை தற் போது நவீனமயமாக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரப் பதிவு முடிந்த பிறகு அதை உரியவர்களுக்கு வழங்க சில நாட்கள் ஆகிறது. இந்நிலையில் பத்திரப் பதிவுக்காக வரும் மக்களை அடுத்த நாளும் அலைய விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்.