ப.சிதம்பரம்: ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சொந்தமல்ல

ப.சிதம்பரம்: ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சொந்தமல்ல

1 mins read

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தங்களுக்குச் சொந்தமானது என மோடி அரசு நினைப்ப தாகவும் ஆனால் உண்மை யில் அது மத்திய அரசுக்கு சொந்தமல்ல என்றும் ப. சிதம் பரம் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலை யில், ஓர் அதிரடி திருப்பமாக உர்ஜித் பட்டேல் ஆளுநர் பதவியை விட்டு 10ஆம் தேதி விலகினார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகியதாகக் கூறிய அவரது பதவி விலகலை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி யும் மத்திய அரசின் பொரு ளியல் விவகாரங்கள் துறை யின் முன்னாள் செயலாளரு மான சக்தி காந்ததாஸ், 61, பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் இது குறித்துப் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், "மோடி அரசாங்கம் ரிசர்வ் வங்கி தனது அரசின் மற்றொரு துறையாக உள்ள தாகக் கருதுகிறது. சிபிஐ நாம் சொல்வதைக் கேட்கிறது. ஆனால் ஏன் இந்திய ரிசரவ் வங்கி கேட்கவில்லை என நினைக்கிறது. ஒரு மத்திய வங்கியின் சுதந்திரம் என்ன வென்று இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை," என்று கூறியுள்ளார்.