ராகுலை கைகுலுக்கி, வாழ்த்தாத மோடி

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங் களிலும் பாஜக வசம் இருந்த ஆட்சியைக் காங்கிரஸ் தன் வசம் கைப்பற்றியது. இந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றி வரலாறு காணாத வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தில் பிரதமர் நரேந்திர மோடி, தன் அருகே காங்கிரஸ் தலைவர் ராகுல் அமர்ந்திருந்தபோதும் அவ ரது கட்சி பெற்ற வெற்றி பற்றி ஒருவார்த்தை கூட பாராட்டி கூற வில்லை என்றும் முகத்தை கோபத்துடன் இறுக்கமாக அவர் வைத்திருந்ததாகவும் தேர்தல் பிரசார மோதல் இன்னும் நீடிக் கிறது என்றும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் ராகுலும் அருகருகே இருந்தும் கூட வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி, மன்மோகன் சிங்கை சந்தித்துக் கை குலுக்கினார். ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடம் மத்திய அமைச்சர் விஜய் கோயல், ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கைகுலுக்கினர். ஆனால் மோடி, ராகுலிடம் கைகுலுக்கல் இல்லை. அண்மையில் நடந்த ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் இரு வரும் ஒருவரை ஒருவர் கடுமை யாக விமர்சித்துக்கொண்டனர். அந்தக் கோபம் இந்த நிகழ்ச்சி யிலும் தெரிந்தது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாகிஸ்தான் தீவிர வாதிகள் ஐவர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து துப்பாக் கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட 6 காவல்துறையினர், நாடாளுமன்ற கண்காணிப்பு ஊழி யர்கள் இருவர், தோட்டக்காரர், புகைப்படக்காரர் ஆகியோர் பலியாயினர். இவர்களின் தியா கத்தை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!