கமல்நாத்: விவசாயிகளின் கடன் 10 நாட்களில் தள்ளுபடி

போபால்: தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 நாட்களில் விவசாயிகளின் கடன் கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வராக தேர்வு செய் யப்பட்டுள்ள கமல்நாத் உறுதி அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் வாடி கட்சி ஆதரவுடன் ம.பி. மாநில முதல்வராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் வரும் 17ஆம் தேதி திங்கள்கிழமை பதவியேற்க உள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத், மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் ஆகியோர் ம.பி. முதல்வர் பத விக்கான போட்டியில் இருந்தனர். இவர்களில் திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரி விக்க, கமல்நாத்-சிந்தியாவுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கமல்நாத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தார் சிந்தியா. இவர் துணை முதல்வராகப் பதவியேற் கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக் கள் கூட்டத்தில் முதல்வராக கமல் நாத் ஒருமனதாகத் தேர்வு செய் யப்பட்டார். வரும் 17ஆம் தேதி போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றுக்கு கமல்நாத் அளித்த பேட்டியில், “கடந்த நவம் பரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் 10 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறினார். அதன்படி எனது தலைமையில் ஆட்சி அமைத்த வுடன் முதல் பணியாக விவசாயி கள் கடன்கள் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்படும்,” என்றார்.