வெரோனா: ஒரு காலத்தில் செல் வாக்குடன் திகழ்ந்த வத்திகன் அதிகாரி கார்டினல் ஜார்ஜ் பெல் குற்றவாளி என ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. இத்தகைய குற்றச்சாட்டில் வத்திகனின் உயர் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை. வத்தி கனின் 3வது சக்தி வாய்ந்த முக்கிய பொறுப்பிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் திரு பெல் நீக்கப்பட்டார். 1990களில் பாடகர் குழுவைச் சேர்ந்த இரு மாணவர்களிடம் அவர் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக முதன்முதலில் 'டெய்லி பீஸ்ட்' தெரிவித்திருந்தது.
முன்னாள் வத்திகன் அதிகாரி குற்றவாளி
1 mins read
-

