சென்னை: தினகரனின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு தனக்கே உரிய பாணியில் தினகரன் சிரித்த முகத்துடன் பேட்டிகள் அளித்தாலும் சற்று நிலைகுலைந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற ஆதரவு எம்எல்ஏக்கள் பற்றிய கவலையும் இருப்பதால் அவர் குழப்பத்தில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவி பறிபோன மற்ற ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது எம்எல்ஏக்கள் நாளைக் காலை பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தகுதிநீக்க எம்எல்ஏக்கள் சசிகலாவைச் சந்திக்கத் திட்டம்
1 mins read

