சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை பிற்பகல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் 8.1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக் கூடும் என்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மிதமானது முதல் கனத்தமழைவரை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் நேற்று கொந் தளிப்புடன் காணப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில், "புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 16ம் தேதி அதிகாலை 2.30 முதல் 17 ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடலில் சுமார் 10 கி.மீ. தொலைவு வரை தொலைதூரச் சலனங்கள் ஏற் படும். அலைகள் 2.5 மீட்டர் உயரம் வரையிலும் அதிகபட்சமாக 4.2 மீட்டர் முதல் 8.1 மீட்டர் உயரம் வரையும் எழும்பக்கூடும். மேலும் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் அதிகபட்சமாக 5.8 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும். மேலும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்," என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

