திருவண்ணாமலை: திருமணத்துக்காக வைக்கப்பட்ட பதாகையில் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் நெருக்கமாக இருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. அந்த வழியாகச் சென்ற மாவட்ட நீதிபதி புகழேந்தி அந்தப் பதாகைகளைப் பார்த்தார். சிறுவர்களிடையே பாலுணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி அந்தப் பதாகைகளை அகற்றுமாறு பணித்ததோடு அந்தத் தம்பதியைக் கைதுசெய்யுமாறும் அவர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரப் பதாகைகளை வைப்பதன் தொடர்பில் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவற்றைப் பின்பற்றாமல் அநாகரிகமான முறையில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றிய நீதிபதிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பதாகை வைத்த திருமணத் தம்பதியைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
1 mins read

