99.99% வீடுகளுக்கும் மின்சாரம்

99.99% வீடுகளுக்கும் மின்சாரம்

1 mins read

புதுக்கோட்டை: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் 99.99% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக் கோட்டையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், மின்வாரிய தொழிலாளர்களின் அயராத பணியினால் மாவட்டத்தில் உள்ள 4,062 கிராமங் களில் ஒரே ஒரு கிராமத்தைத் தவிர மற்ற அனைத்து இடங் களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.